புது வருடம் ஆரம்பாகியுள்ள நிலையில் புதிய மோட்டார் கார்களை கொள்வனவு செய்யவுள்ள அனைவருக்கும் "CBA 0001" என்ற புதிய பதிவெண்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது என திணைக்கள ஆணையாளர் ஜெனரல் எ.எச்.கே ஜகத் சந்ரசிறி தெரிவித்தார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஜெனரல் எ.எச்.கே ஜகத் சந்ரசிறி ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மோட்டார் கார்களுக்கான "CAA 0001" என்ற வாகன பதிவிலக்கங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதான "CA" என்ற வகையில் 26 ஆங்கில எழுத்தை அடிப்படையாகக் கொண்டு "CAA 0001" தொடக்கம் "CAZ 9999" வரை  பகுதி பிரிவுகள் காணப்படுகின்றன.

"CAA 0001 - CAZ 9999"  என்ற பகுதிப் பிரவிலக்க வகையினுள்  கடந்த நான்கரை வருடங்களாக 246,000 மோட்டார் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவராவது "CAX"  என்ற மோட்டார் வாகன பதிவிலக்கத்தை விரும்பின் மேலதிகமாக 70,000 ரூபாவை செலுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.என்று தெரிவித்தார்.

புதிய பதிவிலக்கமான "CBA 0001" என்ற 2 வாகன இலக்கத்தகடுகளை செடான் நிறுவன உரிமையாளருக்கு சந்ரசிறி நேற்று எதுல்கோட்டையில் வைத்து கையளித்து புதிய வாகன பதிவு தொடரிலக்கத்தை உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளார்.