ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தலைவரை எதிர்வரும் 9ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் போட்டிக்கான தலைவரைத் தெரிவு செய்வது குறித்த கலந்துரையாடல் நேற்று இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இதில், இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் கே.மதிவாணன், தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க உட்படப் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் நிறைவில், எதிர்வரும் ஒன்பதாம் திகதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவரைத் தெரிவுசெய்வதாக முடிவுசெய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது, அஞ்சலோ மெத்யூஸ் அல்லது தினேஷ் சந்திமால் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தேர்வுக் குழுத் தலைவர் தம்மிடம் தெரிவித்ததாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை நோக்கற்பாலது.