வைபவ் நடிப்பில் டீகே இயக்கத்தில் உருவாகவிருக்கும் காட்டேரி என்ற படத்திலிருந்து நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த முன்னணி நடிகை ஹன்சிகா விலகியிருக்கிறார்.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது,‘காட்டேரி படத்தின் திரைக்கதைக்கு ஹன்சிகாவின் பங்களிப்பு நன்றாக இருக்கும். ஆனால் படத்தின் பட்ஜட் போதுமான அளவிற்கு இருப்பதால் ஹன்சிகாவிற்கு பதிலாக வேறு முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறோம். அனேகமாக  தமன்னா அல்லது காஜல் அகர்வால் நடிக்கக்கூடும்’ என்று தெரிவித்தனர்.

ஆனால் திரையுலகில் விசாரித்தபோது, இயக்குநர் டீகே படத்தின் திரைக்கதையில் ஆபாச நெடியையும், இரட்டை அர்த்த வசனம் மற்றும் காட்சி அதிகமாக இருப்பதால் முன்னணி நடிகைகள் நடிக்க மறுக்கிறார்கள் என்றும், முன்னணி நடிகை நிக்கி கல்ராணி இது போல் நடித்ததால் அவருக்கு தற்போது வாய்ப்பு குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்