சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பதினாறு வயது மாணவியை, சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைத்துப் பராமரிக்குமாறு களுத்துறை பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரை இம்மாதம் பதினைந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

தனது மகளுக்கு நான்கு வயதாக இருக்கும்போதே அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின், சந்தேக நபரும் தானும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான தனது சிறிய தந்தை தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்து வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்த சிறுமி, கடந்த 31ஆம் திகதி இரவு தன் தாய் பிரித் ஓதும் வைபவத்துக்காகச் சென்றிருந்தபோது, தனித்திருந்த தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுமி களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.