(எம்.எம். மின்ஹாஜ்)

ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும்  என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணய பணிகள் நிறைவடையவுள்ளன. இது குறித்தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கையளிக்கப்பட உள்ளன. 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.