ஹெரோயினை வைத்திருந்த குற்றத்துக்காகவும் அதை வினியோகிக்க முயன்ற குற்றத்துக்காகவும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது கொழும்பு மேல் நீதிமன்றம்.

குறித்த சந்தேக நபர், 18.2 ‘கிராம்’ ஹெரோயினை வைத்திருந்தமைக்காக போதைத் தடுப்பு பொலிஸாரால் கடந்த 2010ஆம் ஆண்டு ராஜகிரியவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

தீர்ப்பு வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, சந்தேக நபர் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது குற்றத்திற்கு தண்டனையாக மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.