(ப.பன்னீர்செல்வம்)

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்திய வெளிவிவகார துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான குழுவினர் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு  விஜயம் செய்யவுள்ளனர். 

இரு நாடுகளினதும் பிரதிநிதிகள் தலைமையில் நடத்தப்படும் இந்த விசேட பேச்சுவார்த்தை இந்தியாவின்  புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு  வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் நேற்று முன் தினம் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்திய வெ ளியுறவு அமைச்சர்  இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பரவலாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக  இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடிப்பதற்கு அமைச்சர் அமரவீர பெரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.