சொக்லேட் பிரியர்களே முப்பது ஆண்டுகளுக்குள் சொக்லேட் ஆசையை தீர்த்துக்கொள்ளுங்கள்!!!

Published By: Digital Desk 7

03 Jan, 2018 | 03:47 PM
image

பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சொக்லேட் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு சொக்லேட். கொக்கோ மரங்களில் இருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ் சொக்லேட்டின் மூலப்பொருளாக விளங்குகிறது.

இந்த கொக்கோ மரங்கள் ஆப்பரிக்க நாடுகளில்தான் அதிக அளவில் உள்ளன. உலகில் 50% சொக்லேட் ஆப்பரிக்காவில் இருந்துதான் பெறப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அவ்வறிக்கையில்,

உலகின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. மற்ற மரங்களை போல தொழில்நுட்பத்தை கொண்டு கொக்கோ மரங்களை வளர்க்க முடியாது. 

90% கொக்கோ மரங்கள் சிறிய அளவிளான பண்ணைகள் மூலம்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் சொக்லேட் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்