பெருவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பஸமயோ பகுதியில் சுமார் 57  பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும், டிரக் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் பஸ்ஸானது பாரிய பள்ளத்தினுள் விழுந்ததாகவும், 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும் பெரு  பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.