பாடசாலைக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 4 பேர் காயம் : பெங்களூரில் சம்பவம்

Published By: Priyatharshan

08 Feb, 2016 | 02:23 PM
image

பெங்களூரிலுள்ள பாடசாலைக்குள் புகுந்த சிறுத்தையை புகைப்படம் எடுக்க சிலர்  முற்பட்டவேளை, சிறுத்தை கோபத்தில் தாக்கியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். 

பெங்களூர் வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப் பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பாடசாலை மூடப்பட்டிருந்தது. காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். 

இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாடசாலையின் முன்வாசல் வழியாக சிறுத்தை நுழைந்தது.

சிறுத்தை உள்நுழைந்ததை அறியாத பாதுகாவலர்கள் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமரா காட்சிகளை வழக்கம்போல் சோதனை செய்தனர்.

அப்போது பாடசாலையின்  நுழைவாயிலில் இருந்த சி.சி.டி.வி கெமரா ஒன்றில் சிறுத்தை செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே  வர்த்தூர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வனத்துறையினரை வரவழைத்து, சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

குறித்த சம்பவத்தை இதை புகைப்படம் எடுக்க சிலர்  முற்பட்டபோது சிறுத்தை கோபத்தில் சீறி தாக்கியது. இதில் 4 பேர் காயமடைந்தனர். 

வனத்துறை அதிகாரிகள் சுமார் 14 மணி நேரம் போராடி சிறுத்தை மீது மயக்க ஊசியை  செலுத்தி அதை பிடித்து கூண்டில் அடைத்து உயிரியல் பூங்காவில் விட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்