‘சுவசெரிய 1990’ அம்பியுலன்ஸ் சேவைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை (3) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்றலுடன் அலரி மாளிகையில் வைத்து ஆரம்பாகவுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய 1990 திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாவனைக்கு வரும் வகையில் 88 அம்பியுலன்ஸ் வண்டிகள் இயக்கப்பட்டு வந்தன.

நாடு முழுவதும் அமுல்படுத்தவென ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 209 அம்பியுலன்ஸ் வண்டிகள் நாளை முதல் இயக்கப்படவுள்ளன.

விரைவில் இத்திட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளது.