உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் தன்னை கேலி செய்த 12 வயது சிறுவனான ரசிகரை பங்களாதேஷ் வீரர் சபீர் ரஹ்மான் தாக்கிய விவகாரத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கடும் தண்டனையளித்துள்ளது.

பங்களாதேஷ் வீரரான சபீர் ரஹ்மானுக்கு ரூபா 15 இலட்சம் அபராதமும் 6 மாதகால உள்நாட்டு கிரிக்கெட் தடை மற்றும் மைய ஒப்பந்தம் ஆகியன இரத்து செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்குள்ளாகினார்.

சபீர் ரஹ்மானின் சொந்த ஊரான ராஜ்ஷாஹியில் இடம்பெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டியின் போது 12 வயது ரசிகர் ஒருவர் ரஹ்மானை கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து ரஹ்மான் இன்னிங்ஸ் இடைவெளியின் போது பின்னாலுள்ள திரைக்குப்பின்னால் சென்று குறித்த 12 வயது சிறுவனை அடித்து உதைத்துள்ளார்.

இதனை நடுவரொவுர் அவதானித்து போட்டி நடுவரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் போட்டி நடுவர் சபீரை விசாரணைக்கு அழைத்த போது அவரையும் கடுமையாகத் திட்டியுள்ளார் சபீர்.

சபீர் ரஹ்மான்  10 டெஸ்ட் போட்டிகள், 46 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 33 இருபதுக்கு -20 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இதேவேளை, பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டிகளுக்கான ஆடுகள தயாரிப்பு குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்ததற்காக தமிம் இக்பாலுக்கு 6,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.