வெட்டப்பட்டுக்கொண்டிருந்த மரம் எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்ததில் மூன்று வயதுப் பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது.
ஒஷாதி மதுபாஷினி என்ற இந்தக் குழந்தை, தனது பெற்றோர், சகோதரனுடன் புதுவருட பிறப்பை முன்னிட்டு தனது தாத்தா-பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருந்தது.
புத்தாண்டு தினமான நேற்று குழந்தையை அதன் பதினொரு வயது சகோதரனின் பராமரிப்பில் விட்டுவிட்டு அதன் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.
அப்போது, தோட்டத்தில் மரம் வெட்டுவதைப் பார்க்க விரும்பிய அந்தக் குழந்தை, மரம் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக மரம் முறிந்து குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதில் அக்குழந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தத் திடீர் விபத்தால் மரத்தைத் தறித்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர். அத்துடன், தம் மீது பழி விழுந்துவிடும் என்ற பயத்தில் அவர்கள் குழந்தையை அதன் சகோதரனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த பெற்றோர் உடனடியாக வீடு திரும்பி, குழந்தையை ஹோமாகமை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது.
அங்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோதும் அது பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து மீப்பே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற இத்துக்ககரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM