மாக்கந்துறையில் அமைந்துள்ள வடமேல் பிராந்தியத்துக்கான கலால் உதவி ஆய்வாளரின் வீட்டின் மீது இன்று (2) அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, உதவி ஆய்வாளர் லெஸ்லி ஜயந்த ரணவீர வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆய்வாளருக்குச் சொந்தமான மூன்று வாகனங்களைக் குறிவைத்து, ‘கராஜ்’ மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில், குறித்த வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவித தகவலும் தெரியவரவில்லை.