போதை என்பது ஒருவிதமான சொல்ல முடியாத ஒரு இன்ப உணர்வை அனுபவிப்பதாக எண்ணிக்கொண்டே போதை பொருட்களை ஒவ்வொருவரும் பாவிக்கின்றார்கள். அந்தவகையில் காதல், சிகரெட், மது போலவே வாசிப்பும் ஒரு போதைப் பொருள் ஆகும். வாசிப்பு என்பதை ஒரு சுமையாக நினைப்பவர்களுக்குக்கூட பிடித்தமான ஒரு விசயத்தை வாசிக்கத் தொடங்கினால் பல பக்கங்கள் பறக்கும் போதும் நேரம் தூக்கம், பசி மறந்து அதில் மயங்கிக்கிடக்கும் அளவுக்கு வாசிப்பு ஈர்ப்புடையது என்பதால் வாசிப்பையும் நாம் ஒரு போதை என்றே கருதவேண்டியுள்ளது.
ஆனால் வலிமை மிகு இன்றைய தொழில்நுட்ப சூழலில் தாக்குப் பிடிக்க முடியாமல் அருகி கொண்டே வருவவதுதான் கவலைக்குரியவிடயமாகும். வாசிப்பினால் ஒரு மனிதன் பூரணமடைகிறான். வாழ்வின் முன்னேற்றத்திற்கு வாசிப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
வாசிப்பு மூலம் அதிகளவான G.B கொண்ட தகவல்களை நமது மூளையில் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையின் போது அவற்றை எவ்வித இடையூறுமின்றி மீள பயன்படுத்தலாம். மற்ற தொழில்நுட்ப சாதனங்களில் இந்த வசதி இவ்வளவு சிறப்பாக செயற்படுவதில்லை. நாம் வாசிக்கின்றோம் என்பதைவிட எதை வாசிக்கின்றோம் என்பதே பிரதானம். துப்பறியும் நாவல், நகைச்சுவை, துணுக்குகள் வாசித்து என்ன பயன். இதைவிட நம்மில் பலர் சினிமா செய்தி என்ற பக்கத்துக்காகவே பத்திரிகை வாங்குபவர்களும் உண்டு. இவையின்றி நாம் சிறந்தவற்றை படித்தே பயன்பெறவேண்டும். பகுத்தறிவை அறிய காமராஜரை படிக்க வேண்டும். வீரம் புதுமை, உத்வேகம் அடைய பாரதியை படிக்க வேண்டும். தேசப்பற்று, தன்னம்பிக்கைகொள்ள சேகுவேராவை படிக்கவேண்டும். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுகிறாய். நீ எதை வாசிக்கிறாயோ அதையே நீ நினைக்கிறாய். எனவே வாசிப்பை எல்லோரும் நேசித்து வாழ்வில் உயர்வு பெறுவோமாக.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM