அழகியல் பிரச்சினைகளுக்கு உகந்த லேசர் சிகிச்சைகள்

Published By: Robert

08 Feb, 2016 | 12:20 PM
image

இன்றைய பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் அழகியல் ரீதியாக அவர்கள் பல பிரச்சினைகள் எதிர்கொள்கிறார்கள். 

வாகனக் கழிவுகள், பணிகள் சார்ந்த மன அழுத்தம் என்பனவும் காரணங்களாக இருந்தாலும், அவர்களைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணி வெயில். இவ்வாறானவர்கள் ‘க்ரெக்கல்ஸ்’ (சரும வெடிப்பு), ‘லென்டிஜீன்ஸ்’ (சிறு வெண் புள்ளிகள்), ‘பிக்மன்டேஷன்’ (நிறமாற்றம்) போன்ற பிரச்சினைகளுக்கு அதிகமாக முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது. 

‘மெலாஸ்மா’ என்பது ஹார்மோன் சார்ந்த ஒரு பிரச்சினை. இது முகங்களில் வடுக்கள் போன்ற அடையாளங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆனால், அந்த ஹார்மோன் சூரிய வெப்பத்தால் உந்தப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சன் ஸ்க்ரீன் போன்ற க்ரீம்கள் பயன்படுத்துவது மட்டும் தீர்வாகாது. லேசர் மூலமான சிகிச்சைகளே இவ்வாறான பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்த்துவைக்கக் கூடியன.

எவ்வளவு தான் க்ரீம்களையும் லோஷன்களையும் தடவி வந்தாலும், இவையெதுவும் சருமத்துக்கான புத்துணர்ச்சியைத் தருவதில்லை. 

சருமம் என்பது செல்களாலேயே உருவாக்கப்படுகிறது. வயது, காலநிலை, தொழில், உணவு போன்ற பல அம்சங்கள் இந்த செல் உருவாக்கத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவர்கள் தமது சருமத்தைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, லேசர் மூலமான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில், செல்களுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிட்டுவதால், அவை மீண்டும் தூண்டப்பட்டு தொழிற்பட ஆரம்பிக்கின்றன. ஆகையால், செல்களைத் தூண்டி இயங்கச் செய்தாலே, சருமம் பொலிவு பெற்றுவிடும்.

லேசர் சிகிச்சை  மூலம் சருமத்தில் ஏற்படக் கூடிய அனைத்து அழகுத் தடைகளையும் சரிசெய்யலாம். பெரும்பாலான பெண்கள், முகத்தில் பருக்கள், சிறு வயதில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அம்மை நோயினால் ஏற்பட்ட வடுக்கள், கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையம், கரும்புள்ளி, தேவையற்ற மச்சம் என்பவற்றை உறுதியாக நீண்ட காலத்துக்கு அல்லது நிரந்தரமாக அகற்றி விட முடியும். 

சிசேரியன் அல்லது வேறு சத்திர சிகிச்சைகளைச் செய்துகொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதிகளில் அடையாளங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயதான தோற்றத்தைத் தரும். அவர்களுக்கும் இந்த சிகிச்சை  கை கொடுக்கும். வெண்குஷ்டம், வெரிக்கோஸிஸ் எனப்படும் நரம்புப் புடைப்பு போன்ற நோய்களையும் லேசர் சிகிச்சையால் தீர்த்துவைக்க முடியும். இவை அனைத்துக்கும் மேலாக, தேவையற்ற உரோம வளர்ச்சி பல பெண்களுக்கும் தீராத மனக்கவலையைத் தரும். அதற்கும் சிறந்த தீர்வை லேசர் சிகிச்சை தருகிறது. 

லேசர் கதிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரையறை இருக்கின்றது. அதாவது, எவ்வகையான கதிர்களை, எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதில் அனேக வேறுபாடுகள் இருக்கின்றன. நிபுணத்துவம் இல்லாதவர்களால் லேசர் சிகிச்சைகள் வழங்கப்படும்போது, சருமத்தில் காயங்கள், வடுக்கள் என்பன தோன்ற வாய்ப்புகள் உள்ளன. ஆயினும், இத்துறையில் மிகுந்த பரிச்சயமும் அனுபவமும் உள்ளவர்கள், தேவையான சருமப் பகுதியில் மட்டும் துல்லியமாக லேசர் வழி சிகிச்சைகளை மேற்கொள்வதால், பக்க விளைவுகள் தோன்ற வாய்ப்பில்லை.

தொடர்புகளுக்கு: 0091 44 42605089

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21
news-image

உணவு குழாய் இயக்க பாதிப்பை துல்லியமாக...

2024-05-13 17:42:00
news-image

'கொரியா' தசை இயக்கப் பாதிப்பை கட்டுப்படுத்தும்...

2024-05-11 18:10:10
news-image

தொப்புளில் ஏற்படும் தொற்று பாதிப்பிற்குரிய சிகிச்சை!

2024-05-11 13:07:58
news-image

அக்ரோமெகலி எனும் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும்...

2024-05-09 16:35:53
news-image

கடை வாய் கோணல் எனும் முகத்...

2024-05-08 17:12:21
news-image

தலசீமியா நோயிலிருந்து மீளப் போராடும் உலகம்...

2024-05-08 12:21:09