(ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் களைவதை பிரதான இரண்டு கட்சிகளும் விரும்பவில்லை. இரு தரப்பினரும் அமைச்சுப்பதவிகளை துறக்கவும் விரும்பப்போவதில்லை. ஆகவே 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்கள் பொய்யான காரணிகளை கூறிக்கொண்டு ஆட்சியை தொடர்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றி மூலம் அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் எமது போராட்டம் தொடரும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் தேசிய அரசாங்கம் தனது உடன்படிக்கை காலத்தை கடந்து செயற்பட்டுவருகின்றமை குறித்து வினவிய போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.