ஒரு கிலோ கிராம் எடை கொண்ட தங்க கட்டியை சட்டவிரோதமாக ஹொங்கோங் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொங்கோங் நோக்கி புறப்பட்டுச் செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை 6.30 மணிக்கு சென்றிருந்த 30 வயதான சீனா பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தின் பெறுமதி 65 இலட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த சீன பிரஜை தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இருந்து கடல் வழியாகவும், விமானங்கள் மூலம் தொடர்ந்தும் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.