ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் வெலிஓயா பகுதியில் கூடிய விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சட்டவிரோத மதுபான போத்தல்களை மீட்டுள்ளதுடன், இதனை வைத்திருந்த நபரும் பொலிஸாரால் இன்று காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் 45 சாராய போத்தல்களும், 48 பியர் டின்களும் சாராயத்தினை ஊற்றிக் கொடுப்பதற்காக வைத்திருந்த 26 சிறிய போத்தல்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதே சாராய போத்தல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மதுபான போத்தல்கள் எதிர்வரும் தினங்களில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.