19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான உலகக்கிண்­ணப்­போட்­டியில், 35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 186 ஓட்­டங்­களை எடுத்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் 19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான உலகக்கிண்­ணப்­போட்­டியில் மூன்­றா­வது காலி­று­தியில் இங்­கி­லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற இங்­கி­லாந்து முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. இலங்­கையின் பந்து வீச்சைத் தாக்­குப்­பி­டிக்க முடி­யாது தடு­மா­றிய இங்­கி­லாந்து 49.2ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 184 ஓட்­டங்­களைப் பெற்­றது.

அவ்­வணி சர்­பாக ரெயிலர் 42 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாக பெற்­றுக்­கொண்டார். இலங்கை அணி சார்பில் வனிது ஹச­ரங்கா டி சில்வா 3 விக்­கெட்­டுக்­க­ளையும்இ பெர்­னாண்டோ 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­னார்கள்.

எளி­தான இலக்கை நோக்கி துடுப்­பெ­டுத்­தட ஆரம்­பித்த இலங்கை நிதா­ன­மாக ஆடி வெற்­றி­யி­லக்கை அடைந்­தது. ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர் அவிஷ்க பெர்­னாண்டோ 95 ஓட்­டங்­களை எடுத்து அணியின் வெற்­றியை உறுதி செய்தார்.

35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 186 ஓட்­டங்­களை எடுத்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.