மோட்டார் சைக்கிளொன்று முச்சக்கர வண்டியொன்றை முந்திச்செல்கையில்,அருகிலிருந்த மதிலுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞரே பலியானவராவார்.

வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மடவளை சிரிமல்வத்தை வீதியில் யஹங்கள சந்தியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

மடவளை பக்கமிருந்து அமுனுகம பக்கமாகச் சென்ற முச்சகரவண்டி மேற்படி சந்தியில் திரும்புகையில் பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அதனை முந்துகையில் முச்சக்கரவண்டியுடன் மோதி தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள மதிலுடன் மோதியுள்ளது.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றவரது தலை பலமாக அடிபட்டதையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் அமுனுகம பிரதேசத்தைச் சோத்ந்தவரென்பதுடன் அவரிடம் சாரதியனுமதிப்பத்திரம் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டிச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தெல்தெனிய நீதிவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் வத்துகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நவரத்ன பண்டார தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.