உருக்குலைந்த நிலையில் நீரோடையொன்றின் அருகே ஆணொருவரின் சடலத்தை, எல்ல பொலிசார் இன்று (31) காலை மீட்டுள்ளனர்.

எல்ல, நாவலகம என்ற பகுதியில் உள்ள நீரோடை அருகே சடலமொன்று கிடப்பதாக எல்ல பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற பொலிஸார் குறிப்பிட்ட சடலத்தை மீட்டனர்.

சடலத்தின் சட்டைப் பைக்குள் கிடந்த அடையாள அட்டையின் பிரகாரம், அந்தச் சடலம் நாவலகம பகுதியைச் சேர்ந்த ஜே.எம்.பிரேமசிறி (52) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது அந்தச் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பண்டாரவளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.