சிலர் ஒருவித நோய்க்கு ஆளாகி உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த உயிர்க்கொல்லி நோய் குறித்து யாழ் மக்களிடையே அச்சம் தோன்றியிருந்தது.

இந்நிலையில், இந்த உயிர்க்கொல்லி நோயை அடையாளம் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற இந்த மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதில், உயிரிழப்புகளுக்கு காரணம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் நெருப்புக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களே என்றும் புதுவிதமான அல்லது எந்தவொரு மர்ம நோயும் இதற்குக் காரணம் அல்ல என்றும் தெரியவந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகையைத் தவிர்க்க முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.