கடவத்தை, ரண்முத்துகல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 37 வயது நபர் நேற்று (30) இரவு 8.15 மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நபரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

கொலையாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை கடவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.