சைட்டம் மருத்துவக் கல்லூரி பட்டதாரிகளை உள்ளீர்க்க இலங்கை மருத்துவர்கள் சங்கம் சம்மதித்திருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்ட தகவலை இலங்கை மருத்துவர்கள் சங்கம் மறுத்திருக்கிறது.

பட்டமளிப்பு விழா ஒன்றில் நேற்று (30) கலந்துகொண்ட லக்ஷ்மன் கிரியெல்ல, சைட்டம் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகளை, ஐந்து வார பயிற்சியின் பின் இலங்கை மருத்துவர்கள் சங்கம் அங்கீகரிக்க சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை மருத்துவர்கள் சங்க பதிவாளர் டொக்டர் டெரன்ஸ் டி சில்வா, இது உண்மைக்கு மாறான தகவல் என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் எனினும் இதுவரை முடிவு எதுவும் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.