பிறக்கவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தினமானது, பிரமாண்ட சந்திர தரிசனத்துடன் பிறக்கவிருப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினமாகும். இத்தினத்தில் பிரகாசிக்கவிருக்கும் சந்திரன், ஒப்பீட்டளவில் பிரமாண்டமானதாகக் காட்சி தரும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திரனின் சுற்றுவட்டப் பாதை ஒழுங்கின்படி, அன்றைய தினம் சந்திரன் பூமிக்கு அருகாமையில் வரவிருப்பதாலேயே இந்த சுவாரசியமான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.