சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணை அறிக்கையை முழுமையாக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தது.

“பிணைமுறி விசாரணை அறிக்கை சற்று முன்னர் என்னிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது” என ஜனாதிபதி தனது ட்விட்டர் கணக்கில் சற்று முன் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி.சித்ரசிறி ஜனாதிபதியிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன்போது, குழுவின் சக உறுப்பினர்களான நீதியரசர் பி.எஸ்.ஜயசுந்தர, ஓய்வுபெற்ற பிரதி கணக்காளர் நாயகம் வி.கந்தசாமி மற்றும் குழுவின் செயலாளர் எஸ்.உடுகம்சூரிய ஆகியோரும் உடனிருந்தனர்.

பிணைமுறி குறித்து விசாரணை நடத்துவதற்காக இவ்வாணைக்குழு கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.