தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மற்றும் அவரது தமிழர் சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலையான வரதராஜப்பெருமாள்,
"தமிழர் சமூக ஜனநாயக கட்சி சார்பாக மட்டக்களப்பு மாநகர சபையில் போட்டியிடும் உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் அறிமுக துண்டுப்பிரசும் விநியோகம் செய்தபோதே பொலிஸார் எம்மை கைது செய்தனர்.
எங்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக பொலிஸாருக்கு விளக்கமளித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு எமது கைது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்தே நாம் விடுவிக்கப்பட்டோம்
இந்த உள்ளூராட்சி தேர்தலின் புதிய சட்டதிட்டங்கள் தொடர்பிலும், தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலும் பொலிஸாருக்கு முறையான அறிவுறுத்தல்களை தேர்தல்கள் திணைக்களம் மேலும் வழங்கவேண்டும்" என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM