ஏழேழு ஜென்மமும் சிறைதான்!

Published By: Devika

30 Dec, 2017 | 01:28 PM
image

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது தாய்லாந்து நீதிமன்றம்.

புடிட் கிட்டித்ராடிலக் (34) என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். விளக்க நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்த புடிட், தனது நிறுவனம் காணி விற்பனை, உபயோகித்த வாகனங்களை விற்பனை செய்வது, அழகு சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, முதலீடுகளைத் திரட்டி வந்துள்ளார்.

இதை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரது நிறுவனத்தில் நிதி சேமிப்பை ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் 160 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டியிருந்தார் புடிட்.

என்றபோதும் இவர் நடத்தி வந்த நிறுவனங்கள் இரண்டும் போலி என்பது பொலிஸாருக்குத் தெரியவந்ததையடுத்து புடிட்டை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், புடிட்டுக்கு 13000 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் மீது கருணை காட்டுவதாகக் குறிபிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை பாதியாகக் குறைத்து 6,6337 தீர்ப்பளித்தது.

எவ்வாறெனினும், 20 ஆண்டுகளுக்குள் அவர் விடுதலையாவார் என்று பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் குற்றச்சாட்டு : பிரேசில் மனித...

2024-09-07 13:44:57
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க...

2024-09-07 09:48:04
news-image

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி...

2024-09-07 09:27:53
news-image

கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ;...

2024-09-06 13:37:54
news-image

தென் சீனாவை நோக்கி நகரும் யாகி...

2024-09-06 10:26:35
news-image

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக...

2024-09-05 16:25:51
news-image

ஜேர்மனியில் முனிச் நகரத்தில் இஸ்ரேலிய துணை...

2024-09-05 17:00:20
news-image

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம்...

2024-09-05 11:02:38
news-image

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு...

2024-09-05 06:26:56
news-image

வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய...

2024-09-04 16:33:57
news-image

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு...

2024-09-04 12:19:41
news-image

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி...

2024-09-04 10:31:05