யோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ  பிரதமரோ ஒருபோதும்  தலையிடமாட்டார்கள்  

Published By: MD.Lucias

08 Feb, 2016 | 10:09 AM
image

கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணையை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சர்ளோ தலையிடவோ அழுத்தம் பிரயோகிக்கவோ மாட்டார்கள் என சட்டம்,  ஒழுங்கு மற்றும் தெற்கு  அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமையை கருத்திற் கொண்டே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை புலனாய்வு பிரிவிற்கு ஏற்பட்டது. இது தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணை தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் ஊடக நிறுவனத்தில் சட்டவிரோதமான முறையில் அரச உடைமை பிரயோகிக்கப்பட்டுள்ளமை மற்றும் நிதி சுத்தகரிப்பு என்பன தொடர்பில் நீதியான சமூகத்திற்கான பிரஜைகள் அமைப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 

இது மிகவும் பாரதூரமான மோசடியாக கருதப்படுகின்றது.இந்த மோசடியில் பல்வேறு சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த வழக்கு விசாரணையை குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவே நிதி குற்றப்புலனாய்வு பிரிவு   முன்னெடுத்து வருகின்றது.  இது தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் 20 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

கால்டன் ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஆரம்ப மூலதனமாக 234 மில்லியன் ரூபா சேர்க்கப்பட்டமை விசாரணைக்கான அடிப்படை காரணமாக கருதப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் நாணய பங்குத்தொகை 4 இலட்த்து நான்கு ரூபாவாகும். இதன் பெறுமதி 7 மில்லியன் என்பது புலனாகியுள்ளது. அத்துடன்  வெ ளிநாட்டு நிறுவனத்தின் ஊடாக 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக பங்குகளாக கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல் குறிப்பிட்டப்பட்டமைக்கு அமைவாக நடைபெறவில்லை. இதன்பிரகாரமே ஆரம்ப மூலதனம் சேர்க்கப்பட்ட விதம் நிதி சுத்தகரிப்பே என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதன் பங்குதாரா்களாக ஸ்தாபக பணிப்பாளர்களாக செயற்பட்ட ரோஷான் வெலிவிட, ரவிநாத் பெர்ணான்டோ, ஷாடியா கருணாஜீவ ஆகியோர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நிறைவேற்று அதிகாரியாக நிஷாந்த ரணதுங்க செயற்பட்டுள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் மின்னஞ்சலை ஆராய்ந்தமையின் ஊடாக, நிறுவன பிரதானியான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷவே இது தொடரபில் தீர்மானம் எடுக்கும் பிரதானியாக செயற்பட்டுள்ளார் என்பது தெ ளிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் குற்றவியல் வழக்கு சட்டத்தின் பிரகாரம்  சந்தேக நபர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளளனர். 

இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமல் இருந்தது. இதன் அடிப்படையிலேயே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய தேவை புலனாய்வு பிரிவிற்கு இருந்தது. விசாரணைகள் முடிவுற்றதன் பின்னர் மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் தற்போது  நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சரவை அமைச்சர்ளோ தலையிடப் போவதுமில்லை. எவ்வித அழுதத்தமும் பிரயோகிக்க போவதில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43