இலங்கை கிரிக்கெட் அணி வீரர்­க­ளுக்கு புதிய பயிற்­சி­யாளர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க வழங்­கிய பயிற்­சி­களின் மூலம் புது நம்­பிக்கை பிறந்­துள்­ள­தாக கிரிக்கெட் வட்­டா­ரங்­க­ளி­லிருந்து அறி­யக்­ கி­டைக்­கின்­றது.

இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக பொறுப்­பேற்ற சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க நேற்­று­முன்­தினம் வீரர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்க ஆரம்­பித்தார்.

அன்­றைய தினம் நான்கு பிரி­வு­களில் வீரர்­க­ளுக்கு பயிற்சிகள் வழங்­கப்­பட்­டன. அத்­தோடு வீரர்கள் அனை­வரும் உற்­சா­கத்­தோடு இந்த பயிற்­சி­களில் கலந்­து­கொண்­டதை காணக்­கி­டைத்­தது.

அத்­தோடு வீரர்­க­ளுடன் சிறந்­த­தொரு தொடர்­பா­டலை வெகு­சீக்­கி­ரத்தில் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

இவரின் நட­வ­டிக்­கைகள் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு புதிய நம்­பிக்­கையைத் தரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மன்றி பயிற்­சி­களின் போது தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்­து­வது குறித்தும் ஹத்­து­ரு­சிங்க ஆலோ­சித்து வரு­கிறார்.

அது­மட்­டு­மன்றி வீரர்­களின் குறை­நி­றை­களை தொழில்நுட்­பத்தின் மூலம் அறிந்து அதற்­கேற்ப பயிற்­சி­களை வழங்கும் திட்­டமும் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அதேவளை அவுஸ்திரேலிய உளவிய லாளர் வைத்தியர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.