நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் இன்று பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமணம் முடித்து ருவன்புர பகுதியில் வசித்துவந்த குறித்த பெண் தாயார் வீட்டிற்கு வந்திருந்த நிலையிலே நீர்த்தேக்க கரையோர பகுதியில்  இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். 

மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்கு நாவலபிட்டி வைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்கப்படவுள்தாகவும் மேலதிகவிசாரணை தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.