ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியில் இனி ஒருபோதும் குடும்ப அர­சியல் உரு­வா­வ­தற்கு இட­மில்லை. எனது தலை­மையின் பின்னர் எனது குடும்­பத்தில் ஒரு­வரும் கட்­சியை ஆக்­கி­ர­மிக்­கப்­போ­வ­தில்லை. 2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அர­சாங்கம் மிகவும் தூய்­மை­யான அர­சாங்­க­மாக மாற்றம் காணும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

என்னை விமர்­சிக்க நினைப்­ப­வர்­க­ளுக்கு இப்­போது எனது கொள்­கையும், நான் சர்­வ­தேச தலை­மை­க­ளுடன் கொண்­டுள்ள உறவும் என்­ன­வென்று விளங்­கி­யி­ருக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கள­மி­றங்கும் 31 பங்­காளிக் கட்­சி­க­ளி­னதும் வேட்­பா­ளர்கள் இணைத்த வி.சேட மாநாடு நேற்று கொழும்பு சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் இடம்­பெற்­றது, இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையில் பங்­காளிக் கட்­சி­களை இணைத்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் களம் இன்று மிகவும் பர­ப­ரப்­பான நிலை­யினை அடைந்­துள்­ளது.இதி­லி­ருந்து பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி இடம்­பெறும் தேர்­தலின் வெற்றி என்­ன­வென்­பது இப்­போதே எமக்கு தெளி­வாகத் தெரி­கின்­றது. இந்தத் தேர்­தலில் நீங்கள் அனை­வரும் வெறு­மனே  பிர­தேச சபை­யினை வெற்­றி­கொள்­ளப்­போ­வ­தில்லை, அதையும் தாண்டி இந்த நாட்­டி­னையே வெற்­றி­கொள்­ளப்­போ­கின்­றீர்கள். இதில் உரு­வாகும்  ஒவ்­வொரு நேர்­மை­யான உறுப்­பி­னரும் அடுத்து இந்த நாட்டின் அமைச்­ச­ர­வையை, பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்கும் நபர்­க­ளாக மாற்றம் பெறு­வ­துடன் இந்த நாட்டின் பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­தி­யாக உரு­வாகும் நிலைமை ஏற்­படும்.

 ஆகவே இப்­போ­தைய பய­ணத்தை சாதா­ரண பய­ண­மாக கருத வேண்டாம். எனவே ஊருக்கு சேவை செய்யும் ஒவ்­வொரு நபர்­களும் இந்த நாட்டு மக்­களின் ஆத­ரவை பெற்று பல­மான அர­சியல் பய­ணத்­தினை ஆரம்­பிக்­கப்­போ­கின்­றீர்கள். இந்த நாட்­டினை எதிர்­கா­லத்தை பொறுப்­பேற்கும், இந்த நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் மனி­தா­பி­மான நேயம் கொண்ட தலை­வர்­க­ளாக நீங்கள் மாற்றம் பெற வேண்டும் என நான் ஆசீர்­வ­திக்­கின்றேன். 

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எனது தலை­மையில் என்ன மாற்­றங்கள் நடந்­துள்­ளன, நான் என்ன செய்­துள்ளேன் என சிலர் கேள்வி எழுப்­பு­கின்­றனர். நாட்டில் அண்­மையில் சில பிரச்­சி­னைகள் எழுந்­தன. தேயிலை இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பாட்டை ரஷ்ய அர­சாங்கம் விதித்­தது. இதன் பின்னர் எமக்கு பாரிய நெருக்­கடி ஏற்­படும் என ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டன .

 எமது வெளி­யு­றவு கொள்கை மோச­மா­னது என கூறினர். எனினும் ரஷ்ய ஜனா­தி­ப­திக்கு நான் ஒரு கடிதம் எழு­தினேன். அத்­துடன் ரஷ்ய அர­சாங்கம் உட­ன­டி­யாக தடையை நீக்­கி­யது. அதேபோல் உர தட்­டுப்­பாட்டு சிக்கல் ஒன்று ஏற்­பட்­ட­போதும் பாகிஸ்தான் பிர­த­ம­ருக்கு நான் தொலை­பே­சியில் கதைத்தேன், உட­ன­டி­யாக 40 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் அனுப்ப அவர் தீர்­மா­னித்தார். அண்­மையில் நான் கட்டார் தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய பின்னர் இலங்­கையில் ஒரு நகரை அபி­வி­ருத்தி செய்ய கட்டார் அர­சாங்கம் முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாக தெரி­வித்­துள்­ளது. இவ்­வாறு பல சம்­ப­வங்­களை என்னால் கூறிக்­கொண்டு செல்ல முடியும். ஆனால் இதுதான் நான் எனது ஆட்­சியில் செய்­துள்ள செயற்­பா­டுகள். சர்­வ­தேச தரப்பை வெற்­றி­கொண்ட விதமும் இதுவே. 

இந்த நாட்டில் ஊழல் இல்­லாத, தூய்­மை­யான அர­சி­யலை உரு­வாக்க வேண்டும் என நான் கூற காரணம் என்ன? கடந்த காலங்­களில் மிகவும் மோச­னான ஊழல் அர­சியல் தலை­தூக்­கி­ய­மையே இதற்குக் கார­ண­மாகும். ஆகவே எனது அர­சாங்கம் எனது ஆட்­சியில் ஊழல் இல்­லாத ஒரு அர­சி­யலை உரு­வாக்­கவே உங்­களின் உத­வியை நான் எதிர்­பார்க்­கின்றேன். 

எனது அர­சியல் பய­ணத்தில் உங்­களின் ஒத்­து­ழைப்பு அவ­சியம். உங்­களின் துணை, அர்ப்­ப­ணிப்பு என்­பன அவ­சி­ய­மாகும். குடும்ப அர­சியல் இல்­லாத களவு, ஊழல், குற்­றங்கள் இல்­லாத தூய்­மை­யான அர­சி­யலை நாம் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வதன் மூல­மாக மட்­டுமே நாட்டை வெற்­றி­கொள்ள முடியும். எனது தலை­மையின் பின்னர் எனது குடும்ப அர­சியல் இந்தக் கட்­சியில் இருக்­காது. இந்தக் கட்­சியை குடும்பம் ஆக்கிரமிக்கும் வகையிலான எந்த தலையீடுகளும் அமையாது. 2020 ஆம் ஆண்டு அமையும் அரசாங்கத்தில் நாங்கள் தூய்மையான, மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய அரசியல் சூழலை உருவாக்குவோம். அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நேர்மையான பயணம் ஒன்றை முன்னெடுக்க, தூய்மையான அரசியலை முன்னெடுக்க அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.