இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின் தேசப்பிதாவான முஹம்மத் அலி ஜின்னாவிற்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாக அவரது 141 ஆவது  ஜனன தினத்தினை உயர்-ஸ்தானிகராலயத்திலே கொண்டாடியது. 

“எங்களுடைய தலைவர்” என்ற கருப்பொருளின் கீழ் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹித் அஹ்மத் ஹஷ்மத்,  பாகிஸ்தான் என்ற தேசத்தினை உருவாக்குவதற்கு முஹம்மத் அலி ஜின்னா மேற்கொண்ட அளப்பரிய சேவை மற்றும் போராட்டங்களுக்காக உயரிய மரியாதையினை செலுத்தினார்.

மேலும் முஹம்மத் அலி ஜின்னாவின் விடாமுயற்சி, ஒற்றுமையின் நோக்கம், இலக்கு மற்றும் தலைமைத்துவம்  இன்றி பாகிஸ்தானின் உருவாக்கம் சாத்தியமடைந்திருக்காது என அவர் கூறினார். 

முஹம்மத் அலி ஜின்னா சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அரசியலமைப்புவாதி எனவும் தெரிவித்தார்.

துணைக்கண்டத்தின் முஸ்லிம்கள் தங்களது மதம், கலாச்சாரம் மற்றும் சமூக மதிப்பு என்பவற்றினை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான இலக்காகவே தனியான தேசமொன்று உருவாக்கப்பட்டது எனவும் இதன்பொழுது உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளுடன் இணைந்து உயர் ஸ்தானிகர் நினைவுதின கேக்கினை வெட்டியமை குறிப்பிடதக்கது.