யோஷித்த கைது செய்யப்பட்டதும் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடிய மஹிந்த

Published By: Robert

08 Feb, 2016 | 09:22 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவின் கைது விவகாரம் நிதிக்குற்றப்புலனாய்வு விடயம் போன்றவை தொடர்பில் காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.   யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை விட அந்த கைது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஐ.தே. க. அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தியுள்ளனர். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் கடந்த வாரம் செய்தியாளர் மாநாடு ஒன்றை  நடத்தியிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவானது கலைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில் ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் இவ்வாறு செய்தியாளர் மாநாட்டை நடத்தியமை தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபாலவுக்கு ஐ.தே.க  அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். 

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இந்த நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக அமைச்சரவை கூட்டத்தில் கருத்து வெ ளியிடுகையில், நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவை கலைத்துவிடுமாறு கோருவது எந்த விதத்திலும் தகுதியானது அல்ல என்று அமைச்சர் நிமல் சிறிபாலவை பார்த்து கூறியுள்ளார். 

அரசாங்கம் என்ற முறையில் அனைவருக்கும் பொறுப்பிருப்பதாக கூறிய சாகல ரத்னாயக ராஜபக்ஷமாரை பாதுகாப்பதற்காகவா அவ்வாறு கூறினீர்கள் என்றும் வினவியுள்ளார். அதற்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நாட்டில் ஏற்கனவே நிறுவனங்கள் இருப்பதாகவே நாம் கூறியதாக தெரிவித்துள்ளார். 

எனினும் இதன்போது கருத்து வெ ளியிட்ட அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அரசாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவ்வாறான ஒரு கருத்தை வெ ளியிடமால் இருந்திருக்கலாம் என நிமல் சிறிபால டி சில்வாவை பார்த்து கூறியுள்ளார். நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது என்றும் அதனை வெறுமனமே கலைத்துவிடமுடியாது என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சுட்டிக்காட்டியுள்ளார். 

கூட்டுப் பொறுப்பு தொடர்பாக பிரிட்டன் பின்பற்றும் முறை தொடர்பான கருத்துடன் தனது பேச்சை ஆரம்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏதாவது விடயம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அந்த தீர்மானத்தை மக்கள் முன்னிலையில் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தினரின் கடமை என்று குறிப்பிட்டார். 

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட  வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்போது அமைச்சர் எஸ்.பி. திஸநாயகவை பார்த்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். "நீங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக கூறியுள்ளீர்கள் அரசாங்கத் தலைவர்களையும், ராஜபக்ஷமார்களையும் இணைக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளீர்கள் இது சரியா?" என்று அமைச்சர் ரவி கருணாநாயக வினவியுள்ளார். 

இதன்போது கருத்து  வெ ளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பார்க்கும் போது அவர்களுக்கு பிணை வழங்கவே முடியாது என்று கூறியுள்ளார். 

இங்கு குறுக்கிட்ட சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸநாயக தான் சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்தாலும் கூட இந்த விசாரணைப் பிரிவுகள் எவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கின்றன என அறியாமல் இருப்பதாக கூறியுள்ளார் . இந்த விடயங்களில் வெ ளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெ ளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரசிங்க யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு குறுகிய நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை விடுத்ததாக கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58