வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் இன்று காலை காலமானார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பன்னீர்செல்வம் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வீரகேசரியில் சாதாரண இலிகிதராக வேலையில் இணைந்த பன்னீர்செல்வம், பின்னர் ஆசிரிய பீடத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் பாராளுமன்ற செய்தியாளராகவும் கடமையாற்றினார்.