அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸின் சன்லான்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சன்லான்ட் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் நேற்று  இரவு  8 மணியளவில் தீ பரவ ஆரம்பித்ததாகவும் சில மணிநேரத்தில் 4 ஏக்கர் நிலப்பகுதிக்கு தீ வேகமாக பரவியதாகவும் லொஸ்ஏஞ்சல்ஸ்  தீயணைப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

தீ பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விமானங்கள் மூலமாகவும், தீயணைப்பு வாகனங்கள் ஊடாகவும் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.