பாகிஸ்தான் சுழற்­பந்து வீச்­சாளர் யசீர் ஷாவுக்கு, தடை செய்­யப்­பட்ட ஊக்க மருந்­தினை உட்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்டில் மூன்று மாதங்கள் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அபு­தா­பியில் இங்­கி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெற்ற போட்­டியின் போது தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்தை உட்­கொண்­டமை தொடர்பில் எழுந்த சந்­தே­கத்­தை­ய­டுத்து இவ­ரது மாதிரிகள் பரி­சோ­த­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

அத­னை­ய­டுத்து சர்­வ­தேச கிரிக்கெட் சபையின் ஊக்­க­ம­ருந்து தடுப்புச் சட்­டத்தின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் பிர­காரம் தற்போது அவருக்கு மூன்று மாதகாலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.