இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக பொறுப்­பேற்­றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்­க­ளாதேஷ் அணியின் முன்னாள் பயிற்­சி­யாள­ரு­மான சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, நேற்று தனது பயிற்­சி­களை ஆரம்­பித்தார்.

கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்­ப­மான சந்­திக்­க­வு­ட­னான பயிற்­சியில் தேசிய அணி வீரர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் இலங்கை அணி பங்­க­ளாதேஷ் செல்­ல­வுள்ள நிலையில் பயிற்­சிகள் தீவி­ர­மாக நடை­பெறும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அதே­வேளை இலங்கை அணியின் தலை­மையும் மாறலாமாம். இலங்கை அணித் தலைவராக மீண்டும் மெத்தியூஸ் அல்லது சந்திமால் நியமிக்கப்படலாம் என்றும் உத்தியோகபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக் கின்றன.