உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வெற்­றி­வாகை சூடும் நோக்­குடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்­டத்­தி­லான முத­லா­வது பிர­சார கூட்டம் எதிர்வரும் ஜன­வரி மாதம் 18 ஆம் திகதி கண்­டியில்  நடை­பெ­ற­வுள்­ள­துடன் இறுதி பிர­சார கூட்டம் பெப்­ர­வரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கட்சி வட்­டார தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் விஜயம் செய்து பாரி­ய­ள­வி­லான பிர­சார கூட்­டங்­களில் கலந்து கொள்­ளவும் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

மேலும் எதிர்­வரும் 6 ஆம் திகதி கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் பங்­காளி கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து பாரிய மாநா­டொன்றை நடத்­து­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. 

இதனையடுத்து அடுத்த கட்ட பிரசார பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகின்றது.