ரஷ்யாவில் செயின்ட் பீட்ட்ரஸ்பர்க் நகரத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள்,

“ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் புதன்கிழமை அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை இத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இக் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அந் நாட்டு பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இக் குண்டு வெடிப்பு குறித்து ரஷ்ய புலனாய்வுக்குழு தரப்பில்,

"200 கிராம் வெடிப்பொருட்கள் உள்ளடங்கிய சாதனம் ஒன்று சேமிப்புக் கிடங்கில் வாடிக்கையாளர்கள் பைகள் அருகில் வைக்கப்பட்டிருந்தபோது வெடித்துள்ளது. இது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாகவே அச் சாதனம் துண்டிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது.