அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுவதாக முன்னாள் நீதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

விலகும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.