வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.மாவட்டத்தில் மாவட்ட மட்டத்திலான முதலிடங்களை யாழின் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இதன்படி கணித பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் பெற்றுள்ளார். இவர் தேசிய மட்டத்திலும் முதலிடத்தை பெற்றுள்ளார். கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாலசுப்பிரமணியம் தாட்சாயினி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 51 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி சாரங்கா விஜயகுமார் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 26 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

பொறியல் தொழிநுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆர்.நிலக்ஷன் 2 ஏ , பி பெறுபேற்றை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 08ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மு.வக்சலன் 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 09ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

உயிரியல் முறமை தொழிநுட்ப பிரிவில் யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி மாணவி 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 3ஆம  இடத்தையும் பெற்றுள்ளார்.

கணிதத்துறையில் யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரி மாணவனான றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.