நடிகை நயன்­தா­ராவின் கட­வு­சீட்டு நகல் மற்றும் அவ­ரிடம் போதைப்­பொருள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டது போன்ற பொய்­யாக தக­வல்­களை புகைப்­ப­டங்­க­ளு­டனும் சமூக வலைத்­த­ளங்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக வெளியிட்ட மலே­சியா விமான நிலைய ஊழியர் ஒருவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.

ஆனந்த் சங்கர் இயக்கும் 'இரு­முகன்' படப்­பி­டிப்பில் கலந்துகொள்ள மலே­சியா சென்ற நயன்­தாரா திரும்பி வரும்­போது விமான நிலை­யத்தில் சோதனைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார் . இதன்­போது அவர் போதைப்­பொருள் வைத்­தி­ருந்­த­தாக செய்தி வெளியா­கி­யது.

இது­தொ­டர்பில் இரு­முகன் திரைப்­ப­டத்தின் பத்­தி­ரிக்கை தொடர்­பாளர் யுவராஜ் கருத்து தெரி­விக்­கையில் , "படப்­பி­டிப்­பிற்­காக மலே­சியா சென்ற நயன்­தாரா படப்­பி­டிப்பை முடித்துக் கொண்டு இந்­தியா திரும்ப கோலா­லம்பூர் விமான நிலை­யத்­திற்கு தனது உத­வி­யா­ளர்­க­ளுடன் வந்தார்.

மலே­சி­யாவில் 2 விமான நிலை­யங்கள் உள்­ளன. அவற்றில் ஒரு விமான நிலை­யத்தில் நயன்­தா­ராவின் கட­வு­சீட்­டுக்கு வேலை செய்ய வந்­தவர் என்ற முத்­திரை அளித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் மற்­றொரு விமான நிலை­யத்தில் அந்த முத்­திரை அவ­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் அவ­ரிடம் விமான நிலைய ஊழி­யர்கள் விசா­ரணை நடத்­தினர். நயன்­தா­ரா­விடம் சிறிது நேரம் விசா­ரணை நடத்­திய அதி­கா­ரிகள் பின்னர் அவரை இந்­தியா திரும்ப அனு­ம­தித்­தனர். திட்­ட­மிட்ட படி அவர் கடந்த 3ஆம் திகதி கேர­ளாவில் உள்ள அவ­ரது சொந்த வீட்­டிற்குச் சென்று விட்டார். ஆனால், இது போன்ற வதந்­தி­களை யார் திட்­ட­மிட்டு பரப்­பு­கி­றார்கள் என்­பது தெரி­ய­வில்லை. இது தொடர்­பாக மலே­சியா பொலிஸ் துறை­யி­ன­ரிடம் 'இரு­முகன்' பட­பி­டிப்புக் குழு சார்­பாக முறைப்­பாடு அளித்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்

இத­னை­த் தொடர்ந்­து நயன்­தா­ராவின் கட­வு­சீட்டு நகல் மற்றும் நயன்­தா­ரா­விடம் விசா­ரணை நடந்­தது பற்­றிய புகைப்­ப­டங்கள் வெளி­யா­னமை குறித்து மலே­சிய அதி­கா­ரிகள் நடத்­திய விசா­ர­ணையில் ,

விமான நிலைய ஊழியர் ஒருவர் ‘பேஸ்புக்' மூலம் குறித்த புகைப்­ப­டங்­களை வெளியிட்டமையும் தொடர்ந்து அது 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியமையம் தெரிவயவந்துள்ளது. இதனையடுத்து குறித்த ஊழியர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.