சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என கணிதத்துறையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவன் றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

ஆரம்பப் பிரிவில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்வி கற்று சிறந்த சித்தி பெற்று பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றேன். 

எனக்கு சிறுவயது முதலே கணிதப் பிரிவில் அதிக ஈடுபாடு இருந்தமையால் உயர்தரத்திலும் கணிதப் பிரிவை தெரிவு செய்து கொண்டேன். 

அதிகமாக எனது கல்வியை அதிகாலை பொழுதில் தான் தொடர்வேன். எதிர்கால மாணவர்களும் கடினமான பயிற்சியை முன்னெடுத்தால் என்னை விட சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து இந்த சமூகத்திற்கு கடைமையாற்றுவதே  எனது இலக்கு என தெரிவித்தார்.