அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்­போர்னில் நடை­பெற்று வரும் ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் குக் சதத்தால் இங்­கி­லாந்து இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து 192 ஓட்­டங்­களை சேர்த்­துள்­ளது.

அவுஸ்­தி­ரே­லிய – இங்­கி­லாந்து அணி­க­ளுக்கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. ஏற்­க­னவே முடி­வ­டைந்­துள்ள மூன்று போட்­டி­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்று தொடரை 3-–0 என வென்று முன்­னிலை வகிக்­கி­றது.

இந்­நி­லையில் 4-ஆவது டெஸ்ட் நேற்­று ­முன்­தினம் பாரம்­ப­ரி­ய­மான மெல்போர்ன் மைதா­னத்தில் தொடங்­கி­யது. ‘பொக்ஸிங் டே’ டெஸ்டில் 90 ஆயிரம் ரசி­கர்­க­ளுக்கு மத்­தியில் அவுஸ்­தி­ரே­லிய –- இங்­கி­லாந்து அணி வீரர்கள் கள­மி­றங்­கி­னார்கள்.

நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவர் ஸ்மித் துடுப்­பாட்­டத்தை தேர்வு செய்தார். 

அவுஸ்­தி­ரே­லிய அணியின் பான்­கிராப்ட், டேவிட் வோர்னர் ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள். வோர்னர் 64 பந்­து­களில் 6 பவுண்­ட­ரி­க­ளுடன் அரைச்­சதம் அடித்தார். பான்­கிராப்ட் 26 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. 89 ஓவர்களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 244 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. ஸ்மித் 65 ஓட்­டங்­க­ளு­டனும், ஷான் மார்ஷ் 31 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். 

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடை­பெற்­றது. ஸ்மித் 76 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். சிறப்­பாக விளை­யாடி அரைச்­சதம் அடித்த ஷான் மார்ஷ் 61 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அவுஸ்­தி­ரே­லிய அணி 327 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. 

இங்­கி­லாந்து அணி பந்­து­வீச்சில் பிராட் 4 விக்­கெட்­டுக்­க­ளையும், ஜிம்மி அண்­டர்சன் 3 விக்­கெட்­டுக்­க­ளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர். 

இதை­ய­டுத்து இங்­கி­லாந்து அணி தனது முதல் இன்­னிங்ஸை தொடங்­கி­யது. அந்த அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக அலெஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன் இரு­வரும் கள­மி­றங்­கினர். ஸ்டோன்மேன் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அவ­ரைத்­தொ­டர்ந்து கள­மி­றங்­கிய ஜேம்ஸ் வின்ஸ் 17 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். 

அதன்பின் குக்­குடன், ஜோ ரூட் இணைந்து நிதா­ன­மாக விளை­யாடி ஓட்­டங்­களை சேர்த்தார். சிறப்­பாக விளை­யா­டிய குக் சதம் அடித்தார். 

இங்­கி­லாந்து அணி இரண்டாம் நாள் ஆட்­ட­நேர முடிவில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து 192 ஓட்டங்களை எடுத்திருந்தது. குக் 104 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 49 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சில் ஸ்டோன் மேன், ஹசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.