அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் 

Published By: Priyatharshan

28 Dec, 2017 | 09:18 AM
image

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார்.

வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய சூரி­யன்­சின்­னத்தில் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்தில் போட்டியிடும் இ.கௌத­மனை ஆத­ரித்து  நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரி­வித்த அவர், 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் ரெலோவும் புளொட்டும் இணைந்து போட்­டி­யிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மாகா­ண­சபை தேர்தல் நடை­பெற இருக்­கின்­றது. இதில் முத­ல­மைச்சர் ஒரு பக்­கமும் மாவை­சே­னா­தி­ராஜா இன்­னொ­ரு­பக்­க­மு­மாக போட்­டி­யி­டு­வார்கள். இதில் நிச்­ச­ய­மாக மாவை சேனா­தி­ராஜா வெல்­லப்­போ­வ­தில்லை. 

 மீண்டும் தற்­போ­தைய முத­ல­மைச்­சரே வெல்­லுவார். மாகா­ண­சபை தேர்­தலில் முத­ல­மைச்சர் தனித்து நிற்­கப்­போ­வதும் இல்லை. ஆனால் பொதுச்­சின்­னத்­திலோ சைக்கிள் சின்­னத்­திலோ போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை அவர் உதய சூரியன் சின்­னத்­தி­லேயே போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது. 

இதே­வேளை அர­சாங்­கத்­துடன் பேசி செய்­யக்­கூ­டிய சின்­னச்­சின்ன காரி­யத்தை கூட எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருந்து சம்­பந்தன் அவர்கள் செய்­ய­வில்லை. காணாமல் போனோர் விட­யம் அர­சியல் கைதிகள் விட­யம் கேப்­பா­பி­லவு காணி விடயம் உட்­பட மக்­களின் பல்­வேறு விட­யங்­களை அர­சுடன் கலந்­து­பேசி தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத எதிர்க்­கட்சி தலை­வ­ரா­கவே இவர் இருக்­கின்றார். ஆனால் தமக்கு தேவை­யான மாவட்ட அபி­வி­ருத்தி குழு பதவி வீடு வாசல் பங்­களா தமக்கு தேவை­யான சலு­கை­களை பெற்­றுக்­கொண்­டார்­களே தவிர தேர்­தலில் வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு உருப்­ப­டி­யாக ஒரு காரி­யமும் செய்­ய­வில்லை. எதிர்க்­கட்சி தலை­வ­ராக சம்­மந்தன் இருந்தால் கூட உண்­மை­யா­கவே அவர் எதிர்க்­கட்சி தலைவர் இல்லை. நாம் கண்ட அமிர்­த­லிங்கம் போன்ற ஒரு எதிர்க்­கட்சி தலை­வரை போன்று தமிழர் மத்­தியில் ஒரு எதிர்க்­கட்சி தலைவர் இல்லை. அமிர்­த­லிங்கம் அவர்கள் ஒரு நாட்­டிற்கு விஜயம் செய்தால் ஒரு நாட்டின் அதி­ப­ருக்கு கொடுக்­கப்­படும் மரி­யா­தைதான் அங்கு கொடுக்­கப்­பட்­டது. ஆனால் இன்­றைய எங்­க­ளது எதிர் கட்சி தலைவர் பத­வி­யா­னது ஜனா­தி­ப­தி­யினால் ஒரு சன்­மா­ன­மா­கவே வழங்­கப்­பட்­டது. 

இது மாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்­றத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களில் என்னை தவிர ஏனைய 15 பேருக்கும் 2 கோடி ரூபா பிர­தம மந்­தி­ரியின் அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக அபி­வி­ருத்தி திட்டம் என்ற பேரில் வழங்கப்பட்டுள்ளது. 

ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கை கேட்டு விட்டு இரண்டரை வருடங்களாக அற்ப சலுகைகளுக்காக பின்னால் நிற்கிறார்கள் கூட்டமைப்பினர் எனவே மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2024-12-10 10:41:56
news-image

மது போதையில் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ்...

2024-12-10 10:31:39
news-image

ரயில் - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-12-10 10:17:11
news-image

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

2024-12-10 10:06:38
news-image

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

2024-12-10 10:03:38
news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37