வவு­னி­யாவில் வர்த்­தகர் ஒரு­வரைக் கடத்தி கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். யுக்­ரே­னுக்கு அடிக்­கடி சென்­று­வரும் வவு­னியா, வேப்­பங்­குளம் பகு­தியைச் சேர்ந்த அருந்­ததிராசா என்­ப­வரை கடத்தி 15 இலட்சம் ரூபா கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவ­ரையே இவ்­வாறு கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

உக்­ரேனில் இருந்து நாட்­டுக்கு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வவு­னியா நக­ரத்­துக்கு சென்ற குறித்த வர்த்­தகர் காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது சகோ­த­ர­ரினால் வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் வவு­னியா பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 காணாமல் போன குறித்த வர்த்­தகர் , வவு­னியா பொலிஸ் நிலையம் திரும்­பி­யுள்ள நிலையில், தான் வவு­னியா நக­ருக்கு சென்ற போது முச்­சக்­கர வண்­டியில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்­ற­தா­கவும் குடும்­பத்தார் பணம் வழங்­காமல் இழுத்­த­டித்­த­மையால் தன்னை விடு­வித்­த­தா­கவும் அவர் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் தன்னை அவர்கள் பளை8 பிர­தேச வீடொன்றில் தடுத்து வைத்­தி­ருந்­த­தா­கவும், 15 இலட்சம் ரூபாவை விடு­வித்த பின்னர் சென்று வழக்­கு­வ­தாக காகிதம் ஒன்றில் எழுதி கையெ­ழுத்து வழங்­கிய பின்­ன­ரேயே விடு­வித்­த­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

 இது தொடர்பில் விசா­ரணை செய்த பொலிஸார் பளை, வவு­னியா பகு­தி­களைச் சேர்ந்த 27 மற்றும் 45 வய­துக்கு உட்­பட்ட  மூவரை  கைது செய்­துள்­ளனர். அவர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணையின் போது, வர்த்­த­கரை கடத்­தி­யதை அவர்கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன், அவர் வழங்க வேண்­டிய கடன் தொகையை வசூ­லிக்க அவரைக் கடத்தி கப்பம் கோரி­ய­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இந் நிலையில் சந்­தேக நபர்கள் நேற்று வவுனிய அனீதிவான் முன்னிலையில் ஆஜர்ச் எய்யப்ப்ட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.