ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் பொது எதி­ர­ணியும் இணைந்தே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைக்கும். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து உள்­ளூ­ராட்சி சபை­களை அமைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை என்று  ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்­துள்­ளது. இப்­போது தனித்து செயற்­பட்­டாலும் மஹிந்த தரப்பும் நாங்­களும் ஒரு அணி­யென்­பதை மறந்­து­விட வேண்டாம் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. சந்­திப்பில் கலந்­து­கொண்ட விஞ்­ஞான தொழில்­நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரே­ம்ஜ­யந்த இதனை தெரி­வித்தார். 

  அவர் மேலும் கூறு­கையில், 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் பலம் மிகவும் உய­ரிய மட்­டத்தில் உள்­ளது. எமது வேட்­பா­ளர்­களை சரி­யாக தெரிவு செய்து களத்தில் இறக்­கி­யுள்ளோம்.  ஐக்­கிய மக்கள்  சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் இணைந்து இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் எமது வெற்­றி­யினை பெற்­றுக்­கொள்ளும் வகையில் நடத்தும் மாநாடு நாளை( இன்று) கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெ­று­கின்­றது. அத்­துடன் நாளை மறு­தினம்( நாளை) கட்­சியின் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் எமது வேட்­பா­ளர்­களை ஒன்­றி­ணைத்த மாநாடும் சுக­த­தாச உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இந்த மாநா­டுகள் இடம்­பெறும். 

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து ஒரு தரப்­பினர் தனித்து கள­மி­றங்­கு­கின்­றனர். அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக கள­மி­றங்க வேண்டும்  என்றே நாம் விரும்­பினோம். அதற்­கா­கவே பொது அணி­யுடன் நாம் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுத்தோம். எனினும் அவை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் இறு­தியில் அவர்கள் மீண்டும் எமது கட்­சிக்கு வந்­தாக வேண்டும். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கடந்­த­கால வர­லா­றுகள் என்­ன­வென்­பது இன்­றைய சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் நினைவில் இருக்கும் என நம்­பு­கின்றேன். தொடர்ச்­சி­யாக 17 ஆண்­டுகள் தோல்­வியின் பின்னர் நாற்­காலி சின்­னத்தில் கள­மி­றங்கி உள்­ளூ­ராட்சி சபை­க­ளையும், பொதுத்­தேர்தல் மற்றும் ஜனா­தி­பதித் தேர்­தலை நாம் வெற்­றி­கொண்டோம்.  மஹிந்த ராஜபக் ஷவே  இன்றும் நாற்­காலி சின்­னத்தின் தலைவர்.  முன்னாள் பிர­தமர் டி.எம்.  ஜெய­ரத்­னவே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர். இதன் அடிப்­ப­டை­யி­லேயே நாம் இம்­மு­றையும் இணைந்து செயற்­பட விரும்­பினோம். எனினும் இப்­போது அதற்­கான வாய்ப்­புகள் இல்லை. 

எனினும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெற்­றி­பெறும்.  அதேபோல் நாம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­படும் பொது எதி­ர­ணி­யுடன் இணைந்தே ஆட்­சி­மைப்போம். அவர்கள் பிரிந்து செயற்­பட்ட போதிலும் அவர்கள் எமது உறுப்­பி­னர்­க­ளே­யாவர்.   அவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறை அவசியம் இல்லை. அவர்களுடன் நாம் உள்ளூராட்சி மன்றங்களை இணைத்து அமைக்க வேண்டிய தேவை இல்லை. தேர்தல் முடிந்துடன் முடிவுகளை பாருங்கள். எமக்கே வெற்றி கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை  என்றார்.