கேரள அரசின் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு பின்னணி பாடகி சித்ரா தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.

எதிர் வரும் ஜனவரி 14ஆம் திகதி மகரவிளக்கு நாளில் இந்த விருது வழங்கப்படுகிறது.

சபரிமலை தொடர்பான பாடல்களை பாடுகின்ற பாடகர்களுக்கு ஆண்டு தோறும் "ஹரிவராசனம்" விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியது இந்த விருது

இதற்கு முன் கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஜெயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோர் இந்த விருதுபெற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா எதிர் வரும் ஜனவரி 14ஆம் திகதி மகரவிளக்கு நாளில் காலை 10 மணிக்கு சன்னிதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.